சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட நெடுஞ்சாலை சீன ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் சேர்த்து ஈர்த்துள்ளது.
கிழக்கு சீனாவின் ஷாங்காய் நகரையும் தென் மேற்கில் உள்ள செங்குடுவையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை பாலத்திற்கு, அருகில் உள்ள மலையின் அற்புத அழகு, தூரத்தில் தெரியும் கிராமங்கள், கீழே பாய்ந்து ஓடும் நதியின் தரிசனம், இதற்கு முன்பு ஒரு மணி நேரமாக இருந்த பயண நேரத்தை 20 நிமிடமாகக் குறைத்தது என்று ஏகப்பட்ட சிறப்புகள்.
2013-ம் ஆண்டு முதல் முதலாக இந்த நெடுஞ்சாலைக்கான திட்டம் பரிந்துரைக்கப்படும் போது, இதற்காக 3 திட்டங்கள் முன் வைக்கப்பட்டது. அதில் 2 திட்டங்கள் மலையைக் குடைந்து பாலம் அமைப்பதாய் இருக்க, மலைகளின் மீதும், அதில் உள்ள உயிரினங்களின் மீதும் அக்கறை கொண்ட என்ஜினியர்கள் 3 வது திட்டத்தை டிக் அடித்து அதன்படி, இயற்கையை தொல்லை செய்யாமல் அதை கட்டியும் முடித்து விட்டனர்.
கடந்த 9-ம் தேதி முதல் இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.





0 Comments