Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு சிபாஸ் நாசரின் மடல்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ.மு.கா உடைய எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தலாக அமைந்ததினை கட்சி தலைமை ஆகிய நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.


மேலும் கட்சினையும் , கட்சி தலைமையின் வாக்குறுதியையும் நிறைவேற்ற காத்திருக்கின்ற தேசியப்பட்யல் ரீதியான சிக்கலி்ல் தவித்துக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இம்மடலினை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நம்பியவனாக...

மதிப்பிற்குறிய தேசியத்தலைவர் அவர்களே! நீங்கள் தேர்தல் கால பிரச்சாரங்களில் தேசியப்பட்டியல் சம்பந்தமாக வன்னி மற்றும் அட்டாளச்சேனை பிரதேச மக்களுக்கு அவ்விரு தேசிய பட்டியலை வழங்கவிருப்பதாக வாக்குறுதி அளித்திருந்தீர்கள் என்பதையும் சுட்டி காட்ட விரும்புகின்றேன்..

ஸ்ரீ.மு.கா யின் வளர்ச்சி என்பது வெருமனே கொள்கை என்ற ஒன்றில் மாத்திரம் தங்கி இருக்கவில்லை மாறாக எம் தலைவர் அஷ்-ஷஹீத் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியமையின் காரணமாக வளர்ந்தது என்பதையும் பின் வரலாற்று ரீதியான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நிருபிக்க எத்தனிக்கிறேன்.

1994 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ.மு.கா குறைந்தது 6 சபைகளை கைப்பற்றும் இல்லையேல் தனது பாராளுமன்ற பதவியினை துறப்பேன் என தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் ஸ்ரீ.மு.கா 4 சபைகளேயே கைப்பற்ற அஷ்ரப் அவர்கள் தனது வாக்குப்படி பதவி துறந்தார்.

இச்செய்றபாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குறியதே... மாறாக வெறும் 4 பாராளுமன்ற ஆசனத்தை கொண்டு வலம் வந்த ஸ்ரீ.மு.கா க்கு அடுத்த தேர்தலில் மக்கள் 10 பாராளுமன்ற ஆசனங்களுடன் வலம் வர மக்கள் வெற்றி வளங்கினார்கள்.

எனவே மதிப்பிற்குறிய தேசிய தலைவர் அவர்களே! தேசிய பட்டியல் சம்பந்தமாக அளித்த வாக்குறிதியை நிறைவேற்றி எம் ஸ்ரீ.மு.கா யின் நிலை பெற தக்கவைத்து கொள்ளுமாறு வினயமாய் வேண்டி கொள்கிறேன்.

காரணம் என்னவெனில் அன்று எம் கட்சிக்குகெதிரான சக்திகள் காணப்படவில்லை ஆனால் இன்று மரத்தினை அடியோடு சாய்ப்பதற்காக மயிலாட்டம் ஆடுகின்ற ஒரு கூட்டம் புறப்பட்டிருப்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள்.

மயிலாட்டம் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் தோற்று போக பாரிய பங்கினை அட்டாளச்சேனை மக்கள் வகுத்து இருந்தார்கள் என்பதினையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

மேலும் மயிலின் பழிவாங்கள், அரசியல் கலாச்சாரம் வன்னி மக்களை எவ்வாறு பாதிக்கவிருக்கின்றது என்பதையும் என்னை விட் நன்கு அறிந்தவர் நீங்கள்.

எனவே தேசிய தலைவரே! உம் வாக்குறுதியினை நிறைவேற்ற இறைவன் நல்லதொரு சந்தர்ப்பத்தை தந்து இருக்கின்றான். எனவே அவ்வாக்குறுதியினை நிறைவேற்றி எம் மரம் ஆயிரம் விழுதுகளுடன் உயிர் பெற வழி கொடுங்கள்.

எனினும், உமக்கு திருகோணமலையில் ஸ்ரீ.மு.கா தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்திருப்பதை கொண்டு அம்மக்களுக்கு என்ன செய்வது என நீங்கள் சிந்திக்களாம். என்றாலும் கடந்த மைத்திரி அரசாங்கத்தில் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற பிரதி அமைச்சு பதவியினை திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்கி கௌரவித்தவர் நீங்கள் ஆனால் அம்மக்களோ நன்றி மறந்து இருக்கிரார்கள் 

என்றாலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மக்களுக்கு ஒரு பரீட்சையாக கொடுத்து பாருங்கள் அவரகளது நன்றி மறவா தன்மையினை நிருபிக்கின்றார்களா என்று பாருங்கள். 

கட்சி செயளாலருக்கு என்ற செய்வது என்று தேசிய பட்டடியலை வழங்கி கௌரவிப்பதா என்ற கேள்வி வரலாம். ஆனால் வரலாறு எம் கட்சி செயளாலர் மயில் கட்சி செயளாலர் போன்று பதவிக்கு ஆசை கொண்டவரா என்ற உண்மையை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பரைசாட்டட்டும்.

என் அறிவிட்குட்பட்ட முறையில் கட்சியின் எதிர்காலத்தையும் தலைமை மீதுள்ள நம்பிக்கையும் கருத்துிற்கொண்டு அம்மடலை சமர்ப்பிக்கிறேன்


A.N.M.SIFAS 
(B.A) Reading L.L.B(OUSL)

குறிப்பு : இக்கட்டுரையை பிரதி செய்பவர்கள் தயவு செய்து (கற்பிட்டியின் குரல்) என் கீழே பதிவிடுங்கள்.

Post a Comment

0 Comments