மீண்டும் பதவியை பிடித்துக்கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச, குருநாகலில் அதிக பிரயத்தனம் மேற்கொள்கிறார் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹாவை அடுத்து குருநாகல் மாவட்டமே இலங்கையின் அதிக வாக்காளர்களை கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், அந்த மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாவதுடன் நாட்டின் பிரதமராக வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டு வருகிறார்.
குருநாகல் மாவட்டத்தில் 12.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதன்மூலம் அந்த மாவட்டத்தில் இருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்தநிலையில் முதியோர் மத்தியில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு இருக்கிறது. எனினும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் மைத்திரிக்கான ஆதரவே உள்ளது.
குருநாகலில் வேலையற்றோர் வீதம் அதிகம் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றக்குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதேவேளை குருநாகலை பொறுத்தவரையில், தமிழ் - முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் அவை நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவில் தீர்க்கமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகலில் 16.2 லட்ச வாக்காளர்களில் 7.1வீதம் முஸ்லிம் வாக்காளர்களும், 1.1 வீத இலங்கை தமிழர் வாக்குகளும் 0.2 வீத இந்திய வம்சாவளி தமிழர் வாக்குகளும் உள்ளன.


0 Comments