Subscribe Us

வொடெப்ட் நிறுவனத்தின் சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே விளையாட்டுப் போட்டிகள்

-The Puttalam Times-

வொடெப்ட் நிறுவனத்தின் அணுசரணையில் கரிக்கட்டி ‘சீ லயன்’ சிறுவர் சங்கம் மற்றும் மதுரங்குளி பத்தாயம் கிராம சிறுவர் சங்கம் ஆகியவற்றின் அங்கத்தவர்களுக்கிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான எல்லே போட்டி 08.08.2015 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரிக்கட்டி மைதானத்தில் இடம்பெற்றது. அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட மதுரங்குளி பத்தாயம் கிராம சிறுவர் கழகம் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தை கரிக்கட்டி சீ லயன் சிறுவர் சங்கம் பெற்றது.



இப் போட்டியின் பிரதம அதிதியாக வொடப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் டி.எல்.எம். மக்கீன், சிறப்பு அதிதியாக முந்தல் பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. ஜினேந்திரா, கரிக்கட்டி கிராமத்திற்கு பொறுப்பான சமூக அணிதிரட்டல் உத்தியோகத்தர் செல்வி. சுபியானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப் போட்டி கரிக்கட்டி கிராமத்தின் வொடப்ட் தொண்டரான திரு. என்.பி. பலதேவ பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது. கிராம செயற்பாட்டுக் குழு அங்கத்தவர்களும் சிறுவர் கழக அங்கத்தவர்களும் ஊர்வாசிகளும் இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தார்கள்.

வொடெப்ட் நிறுவனமானது சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, மதுபானம் போதைப்பொருள் மற்றும் அபிவிருத்தி, பால்நிலை வலுவூட்டல் ஆகிய பகுதிகளில் செயற்றிட்டங்ளை நடைமுறைப்படுத்துகின்றது. அதனடிப்படையில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவின் கீழ் இச் சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப் போட்டி இடம் பெற்றது.

சிறுவர்களை உடல், உள, கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காகவும் தமது உரிமைகளை சிறுவர்கள் தாமே முன்வந்து பெற்றுக் கொள்வதற்காகவும் தேவையான அறிவு, பயிற்சி மற்றும் பங்குபற்றலுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகின்றது.

புத்தளம், முந்தல், கல்பிட்டி செயலகப் பிரிவுகளின் 15 கிராம சேகவ பிரிவுகளில் வொடெப்ட் நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் சிறுவர் சங்கங்கள் வழிநடாத்தப்படுகின்றன.

இச்சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று மிக விரைவில் மதுரங்குளி பத்தாயம் கிராமத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.


தகவலும் படங்களும்: எம்.எப். சுபியானி (அணி திரட்டல் அதிகாரி)



Post a Comment

0 Comments