Subscribe Us

புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான காதி நீதிபதி காலமானார்

-ரஸீன் ரஸ்மின் 


அகில இலங்கை சமாதான நீதவானும் ஓய்வு பெற்ற அதிபரும் புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான காதி நீதிபதியுமான கே.பறக்கதுல்லாஹ், இன்று புதன்கிழமை (05) காலமானார். 

கடந்த 38 வருடகாலம் அரச சேவையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய கே.பறகதுல்லாஹ், இறுதியாக மன்னார் புதுக்குடியிருப்பு அரசினர் பாடசாலையில் அதிபராகக் கடமையற்றியிருந்தார். 

அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான காதி நீதிபதியாக கடந்த ஐந்து வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருந்த போதே இன்று காலமானார். 

Post a Comment

0 Comments