நாளாந்தம் பல நூறு பேர் முன்னாள் நகர சபை தலைவர்,முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிசை சந்தித்த வண்ணம் இருக்கிறார்கள்...அது தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு ஆறுதல் சொல்வதற்காக அல்ல...
கீழே விழுவது மீண்டும் எழுவதற்கே என்னும் தத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக...புத்தளத் தில் தற்காலிகமாக எழுந்துள்ள ஒரு தலைப் பட்சமான அரசியல் மேலாதிக்கத்தை சமப் படுத்துவது காலத்தின் கட்டாயத் தேவை என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காக...
பாயிஸ் அவர்கள் எவ்வித சுணக்கமும் இல்லாது உடனடியாக முஸ்லிம் காங்கிரசில் இணைய வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோளாகும்...முன்னாள் நகர சபை தலைவரின் தாய் வீடாக கருதப்படும் முஸ்லிம் காங்கிரசில் அவர் இணையும் பட்சத்தில் அவரோடு சேர்ந்து ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் காங்கிரசின் அங்கத்தவர்களாக தயாராக உள்ளார்கள்...
இந்த இணைவு சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடத்தோடு பேச்சு வார்த்தை நடத்த சில முக்கியஸ்தர்கள் தயாராகி வருகின்றனர்...
(முக்கிய குறிப்பு:- அதி உயர் பீடமென்பது புத்தளத்தின் high command (?) உடன் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்)...
சரிந்து விழுந்துள்ள புத்தளம் தொகுதி முஸ்லிம் காங்கிரசை மறுபடியும் தூக்கி நிறுத்துவதற்கு பொருத்தமானவர் கே.ஏ.பி. என்பதே நலன் விரும்பிகளின் கருத்தாக இருக்கின்றது...
அவர்களின் இந்த ஆதங்கத்தை கே.ஏ.பாயிஸ் அவர்களும், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பீடமும் கவனத்தில் கொள்ளுமா என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது...
-Ibrahim Nihrir-


0 Comments