Subscribe Us

மேலூர் அருகே மழை வேண்டி மதுவுடன் கறி விருந்து ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத விழா



மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது எட்டிமங்களம் கிராமம். இங்கு உடலாத்தி கண்மாய் கரையில் உள்ள சக்கிவீரன்சாமி ஆதி திராவிடர்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. இந்த கோவிலில் மழை வேண்டி மது குடித்து கறி விருந்து சாப்பிடக்கூடிய ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத விழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 


வழக்கம் போல் நேற்று இங்கு மழை வேண்டி மது குடித்து கறி விருந்து வினோத திருவிழா நடந்தது. இதில் 400 ஆண்கள் கலந்து கொண்டனர். அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப 400 மது பாட்டில்கள் வாங்கி வரப்பட்டு கோவிலில் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் வழங்கிய சேவல்கள் பலியிடப்பட்டு சாமிக்கு படையலிடப்பட்டது. தனியாக கொண்டு வரப்பட்டு இருந்த 100 கிலோ கோழிக்கறி சமைக்கப்பட்டு வறுவல் தயாரிக்கப்பட்டது. இதன்பின் வழிபாடு நடத்தி கண்மாய்க்குள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு தலா ஒரு பாட்டில் வீதம் 400 பேருக்கும் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்களுக்கு வாழை இலை போட்டு கோழிக்கறி பரிமாறப்பட்டது. உறவுமுறை பாகுபாடு இன்றி ஒற்றுமையாக அனைவரும் மது குடித்தனர். இந்த நிகழ்ச்சி நடந்த சில நிமிடங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. 

தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments