Subscribe Us

ஜே.வி.பி.யினர் வாய்க்கு வந்தபடி உளறுகின்றார்கள்: சாந்தனி பண்டார

ஜே.வி.பி.யினர் வாய்க்கு வந்தபடி உளறுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சி கடந்த காலங்களில் அரசாங்கமொன்றை அமைக்கும் அளவிற்கு சத்தமிட்டார்கள்.

இறுதியில் அவர்களினால் நான்கு ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள்.

எங்களைப் பற்றியும் தேசிய அரசாங்கம் பற்றியும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

மக்கள் அவர்களை நிராகரித்துள்ளமை இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

எமக்கு கிடைக்கப்பெற்ற 106 ஆசனங்களுடன் சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு வலுவான அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு சேவையாற்றுவோம் என சாந்தனி பண்டார சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments