கொழும்பு செய்திச் சேவை ஒன்றுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச அளித்துள்ள நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், பொதுத்தேர்தலில் போட்டியிட மஹிந்த எடுத்த முடிவு தவறானது மட்டுமன்றி ராஜபக்ச குடும்பத்தின் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்தவுக்கு இருந்த மரியாதையையும், மக்கள் செல்வாக்கையும் பாதுகாத்துக் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு நான் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். எனினும் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை.
அவர் தற்போது நால்வர் அணியொன்றின் பிடிக்குள் மாட்டிக்கொண்டுள்ளார். அவர்களின் ஆலோசனையை ஏற்றே தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்திருந்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் பொதுமக்கள் அவர் மீது வைத்திருந்த மரியாதையை அடியோடு அழித்துவிடும் என்பதை அவர் உணர்ந்து கொள்ளவில்லை.
அதே நேரம் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்டதன் காரணமாக அனுர யாப்பா மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோரை அவர்களின் பதவியில் இருந்து அகற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு சரியானதே என்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய


0 Comments