Subscribe Us

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்



காருக்கு எப்படி பெட்ரோல் தேவையோ அது போல் நல்ல எரிசக்தி உங்கள் மூளைக்கும் தேவை. அது இல்லையென்றால் உங்களால் திறமையாக செயல்பட முடியாது. சத்தான பொருட்கள் மூளைக்கு நல்ல சக்தியினை அளித்து உங்களை திறம்பட செயல்பட வைக்கும். நீங்கள் சத்தான உணவினை சாப்பிடும் போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

உங்களுக்குத் தெரியுமா? வாழைப் பழம் சாப்பிட்டால் உங்கள் மனநிலை மகிழ்ச்சியாகும்.

அதில் 10மிகி டோபமின் உங்கள் மூளையினை புத்துணர்ச்சி பெறச் செய்கின்றது. அடர்ந்த சாக்லேட்டில் இருக்கும் பஸியினால் மூளையில் செரடோனின் எனும் பொருளை சுரக்கச் செய்து உங்களை நல்ல மனநிலையில் வைக்கும். தவறான உணவுகள் சுமார் 65 சதவீதம் மூளையின் செயல்பாட்டினை பாதித்து உங்களை சோர்ந்தவராகவும், சோகமானவராகவும், கோபமானவராகவும் ஆக்கி விடும். 

அதிக ஸ்டிரெஸ், மன உளைச்சலில் இருக்கும் போது அதற்கான ஹார்மேன் வெளியாகிக் கொண்டிருக்கும்.

வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் ஒமேகா 3 நிறைந்த உணவுகள் இந்த ஹார்மோனை குறைக்கும். அதிக மன உளைச்சல் உடலில் உள்ள புரதத்தினை உடைத்து விடுகின்றது. புரதச் சத்து நிறைந்த உணவினை உண்ணும் போது இந்த ஹார்மோன் தவிர்க்கப்படுகின்றன. 

ஆரோக்கியமான உணவுகளை வாங்க குறைந்த செலவே ஆகும்.

ஒருவர் அதனை அளவாகவே உண்ண முடியும். பழங்களும், காய்கறிகளும் உண்ணப் பழகும் பொழுது அதன் சுவையினை ருசிக்க முடியும். காரம், உப்பு, மசாலா அவைகள் அகன்று விடும். தவறான உணவுகளை தவிர்ப்பதே ஆரோக்கியத்தினை கூட்டி விடும்.

* நிறைந்த சத்துக்கள் கிடைக்கும் பொழுது கண்டிப்பாய் எப்போதும் சோர்வின்றி ஆரோக்கியமாய் இருப்பர்.

* இத்தகு உணவுகள் ஒருவரின் ஆயுளை நீட்டிக்கும்.

* கண்டிப்பாய் மருத்துவ செலவு குறையும்.

Post a Comment

0 Comments