Subscribe Us

header ads

சுறா மீன் தாக்கியபோதும் கடலில் குதித்து தோழியை தைரியமாக காப்பாற்றிய 10 வயது சிறுமி...



அமெரிக்காவில் சுறா மீன் தாக்கியதையும் பொருட்படுத்தாத 10 வயது சிறுமி தனது தோழியை தைரியமாக காப்பாற்றியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநில கடற்கரையில் கடந்த புதன்கிழமை, காலே ஷர்மாக் (10) என்ற சிறுமி தனது 6 வயது தோழியுடன் குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது காலே ஷர்மாக்கின் வலது கால் பகுதியை சுறா மீன் கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி, கால் முழுவதும் கிழிந்த நிலையில் ரத்தம் வழிய மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீரில் இருந்து வெளியே வந்து தனது தோழியை தேடி பதற்றத்துடன் கூச்சலிட்டார்.

ஆனால், அவரது தோழி கடலில் இருந்து வெளியே வரவில்லை. அந்த சுறா மீன் அப்பகுதியிலேயே சுற்றி வருவதை பார்த்த காலே, தைரியமாக மீண்டும் கடலுக்குள் சென்று தனது தோழியை காப்பாற்றி, அவருடன் கரைக்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட காலேவின் வாலது கால் பகுதியில் மட்டும் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது குணமடைந்து வரும் காலே, விரையில் பூரண குணமடைந்து எப்போதும்போல் மகிழ்ச்சியுடன் ஓடியாடி விளையாடுவாள் என அவளது தந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments