Subscribe Us

11 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த 4 கால் பாம்பு எலும்பு கூடு கண்டுபிடிப்பு


பாம்பு என்றால் படையும் நடுங்கும். அத்தகைய பாம்பு இனம் கடல்வாழ் உயிரினத்தில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ அவை பல்லி இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. தனது வழவழப்பான உடல் பாங்களால் தரையில் ஊர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால் சமீபத்தில் பிரேசிலில் 4 கால் பாம்பின் எலும்பு கூட ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக ஆய்வாளர் டேவ் மார்டில் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இது சுமார் 11 கோடி ஆண்டுக்கு முன் இவை வாழ்ந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கு ‘டெட்ரா போடாபிஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த பாம்பின் எலும்பு கூட்டின் அடிப்பாகத்தில் மிக சிறிய 4 கால்கள் உள்ளன.

இதன் மூலம் பாம்பு இனம் கடல்வாழ் உயிரினங்களில் இருந்து உருவானவை அல்ல. பல்லி இனங்களின் பரிணாம வளர்ச்சி என்பது உறுதியாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

4 கால் பாம்பு தனது சிறிய கால்களை நடக்க பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வேட்டையாடிய சிறிய விலங்குகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments