இன்று (25-07-2015) சனிக் கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களினை ஆதரித்து காலை 11.45 மணியளவில் தெகியத்த கண்டியில் அமைந்துள்ள வெலகந்த பிரதேசத்தில் தெகியத்த கண்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் ரணவீர திசாநாயக்க அவர்களின் தலைமையில் பெருந் திரளான சிங்கள மக்களின் பங்களிப்போடு நடைபெற்று முடிந்தது.இது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களினை ஆதரித்து தெகியத்த கண்டியில் நடைபெறும் இரண்டாவது பிரச்சாரக் கூட்டமாகும்.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும்,மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளர் முஹம்மத் ரவூப்,முறுகலஸ்பிட்டிய விகாராதிபதி சங்கைக்குரிய பதவிய கமிட்ட தேரர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் விசேட உரையும் ஆற்றினர்.மு.காவின் மீது துவேஷ ஏவுகணைகள் தாக்கிக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இவ் விகாராதிபதியின் கலந்து கொண்டமை மு.காவின் இன நல்லுறவுப் பாதையினை இலங்கை மக்களுக்கு தெளிவாக கூறி நிற்கின்றது.இதன் போது மக்கள் மத்தியில் பேசிய விகாராதிபதி சங்கைக்குரிய கமிட்ட தேரர் “மு.காவின் மீதான சிங்கள மக்களின் பற்று,இவ் ஆதரவு கண்டு தான் ஆச்சரியப்படுவதாக கூறினார்”.மேலும் பேசுகையில் இனி இலங்கையில் சிறு பான்மை இனம்,பெரும் பான்மை இனம் என்ற வார்த்தைகளினை யாரும் பேசக் கூடாது.முஸ்லிம்கள் ஒழுக்க சீலர்கள் என்பதனை நான் நன்கே அறிவேன் என ஆக்ரோசமாக உரையாற்றி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தனது ஆதரவினையும் வழங்கினார்..
இப் பிரதேசமானது முழுமையாக முஸ்லிம் காங்கிரசினை அடையாளப்படுத்தும் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமையினை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.மறைந்த மு.காவின் ஸ்தபாக தலைவர் அஷ்ரப் அவர்களுக்காக சிங்கள மக்களினால் ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டமை இந் நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாகும்.இவ் விடயமானது மரணித்த தலைவர் மீதும் மு.காவின் மீதும் சிங்கள மக்கள் எவ்வளவு மரியாதையும்,பற்றும் வைத்துள்ளார்கள் என்பதனைக் குறிப்பிடுகிறது.இச் சிங்கள மக்களின் இப் பிரமாண்ட ஆதரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களினதும் வெற்றியினை பறைசாட்டி நிற்கிறது.
இந் நிகழ்வில் விவசாய சங்கம்,மரணாதார சங்கத் தல்லைவர் சுனில், சு.காவின் மாவட்ட அமைப்பாளராக இருந்த கே.எம்.டீ ரோகித (AIA காப்புறுதி நிறுவனத்தின் பிரதி முகாமையாளர்) கலந்து கொண்டு தங்களது முழுமையான ஆதரவினைத் தேரிவித்ததோடு தீவிர பிரச்சாரத்தில் ஈடு படுவதாக உறுதியளித்தார்.தெகியத்த கண்டியில் நடைபெறும் மூன்றாவது பிரச்சாரக் கூட்டம் சமணலதென்ன நடைபெற உள்ளது.அது பற்றிய தகவல்கள் இன் ஷா அல்லாஹ் இன்னும் சில நிமிடங்களில் பதிவேற்றப்படும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.










0 Comments