Subscribe Us

ஐக்கிய தேசிய கட்சியின் ஏ.சி.எம் முபீன் தலைமையில் பிரச்சாரம்

(ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்)



எதிர்வரும் 2015 ஆண்டிற்கான  பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகளை மும்முரமாக ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது.

இதன் படி யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் உள்ளடங்கும் கிளிநொச்சி முழங்காவில் பிரதேச கிராமசேவகர் பிரிவு-74,நாச்சிக்குடா,பள்ளிக்குடா,ஜேம்ஸ்புரம்  பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் எம்.சி.எம் முபீன் தலைமையில்  முதல் பிரச்சார கூட்டம் நேற்று ஆரம்பமானது.

இதன் போது அக்கட்சி சார்பாக போட்டியிடும் எம்.எஸ்(இலக்கம்-4).றஹீம் ஜேபி,செபஸ்தியாம்பிள்ளை மரியதாஸ் (இலக்கம்-3) ஆகியோர் அங்கு வாழும் மக்களை சந்தித்து தமக்கான ஆதரவை கோரினர்.

அவ்வேளை அப்பகுதி மக்கள் கடந்த கால அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளால் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானித்துள்ளதாகவும் வேட்பாளர்களிடம் உறுதியளித்துள்ளனர்.








Post a Comment

0 Comments