Subscribe Us

நான் ஒரு போதும் தப்பி ஓடிப்போகவில்லை: மஹிந்த


பசில் ராஜபக்ச அரசியல்வாதி என்பதால் சிறை சென்றார் எனினும் அது ஒரு பிரச்சினை இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒரு போதும் ஓடிப்போகவில்லை. நான் தோல்வியடைந்து மெதமுல்லைக்கு வந்தேன் கொழும்பில் இருக்கவில்லை, அப்படியில்லை என்றால் இங்கிலாந்து அல்லது பிரான்ஸிற்கு செல்லவில்லை. நான் ஒரு போதும் உங்களை மறக்கவில்லை.

நிதி மோசடி விசாரணை பிரிவு வேட்டையாடும் பிரிவு என்று தான் சொல்ல வேண்டும்.

இதில் அனைவரையும் தாக்கினார்கள், பசில் ராஜபக்சவையும் சிறைக்கு அனுப்பினார்கள் எனினும் அது ஒரு பிரச்சினை இல்லை. ஏன் என்றால் பசில் ராஜபக்ச என்பவர் ஒரு அரசியல்வாதி. நானும் மூன்று மாதம் சிறையில் இருந்து வந்தவன்.

இன்று ரணில் கூறும் மூன்று வார்த்தைகளாக இருப்பது, ராஜபக்சர்களை அகற்ற வேண்டும், ராஜபக்சர்களை அழிக்க வேண்டும், ராஜபக்சர்களை புதைக்க வேண்டும்.

நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றோம், நாட்டை அபிவிருத்தி செய்தமையினாலே எங்களை அழிக்க முயற்சிக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments