Subscribe Us

பாரா­ளு­மன்ற அமர்வின் போது தனது குழந்­தைக்கு தாய்ப்­பா­லூட்­டிய பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்

பாரா­ளு­மன்ற அமர்வின் போது தனது குழந்­தைக்கு தாய்ப்­பா­லூட்டி பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கடும் சர்ச்­சைக்­குள்­ளான சம்பவம் ஆர்­ஜென்­டீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
விக்­டோ­ரியா டொன்டா பெரெஸ் (37 வயது) என்ற மேற்­படி பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புவனொஸ் அயர்ஸ் நக­ரி­லுள்ள பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்தில் இடம்­பெற்ற கூட்­டத் தின் போது தனது 8 மாத பெண் குழந்­தைக்கு பாலூட்­டி­யுள்ளார்.
இந்­நி­லையில் இது தொடர்­பான புகைப்­ப­டங்கள் ஊட­கங்­களில் வெளி­யா­ன­தை­ய­டுத்து கடும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது.மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான விக்­டோ­ரியா 2007 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வானார். இதன் மூலம் ஆர்­ஜென்­டீன பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வான மிகவும் வயது குறைந்த பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற பெயரை அவர் பெற்றார்.
அது முதற்­கொண்டு கவர்ச்­சி­க­ர­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அவர் செல்­ல­மாக அழைக்­கப்­பட்டு வருகிறார்.இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் அவர் தனது குழந்­தைக்குப் பாலூட்ட எடுத்த தீர்­மானம் குறித்து ஆத­ரவா கவும் எதி­ரா­கவும் விமர்­ச­னங்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
அவர் பாரா­ளு­மன்­றத்தில் கட­மை­யி­லி­ருந்த போது குழந்­தைக்கு தாய்ப்­பா­லூட்­டி­யமை தவ­றான செயல் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட பலர் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.
அவர் தனது கட­மையின் மத்­தி­யிலும் ஒரு குழந்­தைக்கு தாய் என்ற ரீதியில் தனது கட­மையை செவ்­வனே நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்கும் அவ­ரது ஆதரவாளர்கள், எனினும் அவர் தனது குழந்தைக்குப் பாலூட்டும்போது தனது உடல் பகுதியை மறைக்கும் வகையில் ஆடையால் மூடி பாலூட்டியிருக்க லாம் என விமர்சித்துள்ளனர்.

Post a Comment

0 Comments