Subscribe Us

header ads

பிரதமரின் உத்தரவிற்கு அமைய மஹிந்தவிற்கு ஹெலிகொப்டர் வழங்கப்பட்டுள்ளது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஹெலிகொப்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முற்று முழுதாக அடிப்படையற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்சளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் உத்தரவிற்கு அமைய ஒரு ஹெலிகொப்டர் கூட வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய அரச தலைவர்களை விடவும் அதிகளவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், பாதுகாப்பு வாகனங்களும் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவிற்கு பாதுகாப்ப அச்சுறுத்தல் காணப்படுவதாக காவல்துறையினர் அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில தரப்பினர் போலியாக இவ்வாறு பிரச்சாரம் செய்து மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments