பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வாரத்திற்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறார் என்று தெரிந்தால் நிச்சயமாக ஆச்சிரியப்படுவீர்கள்.

சமீபத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் பேஸ்புக் பக்கத்தில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் நீங்கள் ஒரு வாரத்திற்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறிர்கள் என்ற கேள்விக்கு 50-60 மணி நேரம் வேலை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இது மற்ற ஊழியர்களின் வேலை நேரத்திற்கு சமமானது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் நிறுவனர் மற்ற ஊழியர்களுக்கு சமமாக வேலை செய்வது நிச்சயமாக ஆச்சரியமான விஷயம் தான்.

மேலும் அவர் "மக்களை ஒருவருடன் ஒருவரை எப்படி இணைப்பது என்பது பற்றியும் மக்களுக்கு எப்படி மேம்பட்ட சேவையை வழங்கலாம் என்பது பற்றியும் சிந்திப்பதில்தான் என்னுடைய பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.