Subscribe Us

வட்டியில்லா கடன் என்ற பெயரில் முஸ்லிம் (குடும்ப) பெண்களை கவர்ந்து வருவதன் பிரதிபலன் என்னவாகும்

-Haja Sahabdeen-


அஸ்ஸலாமு அலைக்கும். எமது (முஸ்லிம்) சகோதரிகள் பலர் சொல்லொனா பொருளாதார (குடும்ப செலவு) பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவது நாம் அறிந்ததே. 

அதற்கான (ஹலாலான) தீர்வுகளை அடைய முயற்சி எடுப்பதை விட இலேசான வழிமுறைகள் உண்டு என்ற விஷ விதையை நமது சகோதரிகளின் மனதில் விதைத்து இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறையை சீரழிக்கவென களமிறக்கப்பட்டுள்ள பல அமைப்புக்கள் எமது நகருக்குள் உலா வருவதை நாம் அவதானித்து வருகிறோம்

இன்று காலை சாப்பாட்டுக் கடையில் நிற்கும்போது கேள்விப்பட்ட விடயம் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. ஆனால் உண்மை என்னவென கண்டறிய வேண்டும். 

நாளுக்கு நாள் இந்த கடன் வழங்களின்பால் மிக அதிகளவில் நமது சகோதரிகள் கவரப்பட்டு வருவதால் இந்த ஏற்பாட்டாளர்கள் முஸ்லிம்கள்தானே என்று மெத்தனமாக இருந்து விடாமல் இதனை ஆராயுமாறு வேண்டுகிறேன். 

புத்தளம் நகரத்தில் மன்னார் வீதி ஸாகிறாவுக்கு முன்னால் முன்னால் கிராம அதிகாரி சகோதரர் மஹ்மூது அவர்களின் வீட்டருகேயும், மணல்குன்றுவிலும் இது நடைமுறைப்படுத்தப் படுவதாக அறிகிறேன். குற்றம் சாட்டவில்லை. என்றாலும் ''வட்டியில்லாமல் கடன் வழங்கும் தாராள மனம் கொண்ட நிறுவனம் எது?" என்ற வகையில் எனது சந்தேகம் நியாயமானதே. 

நான் இதனை புத்தளத்திற்காக மட்டும் பதியவில்லை. எமது ஈமானிய உறவுகள் இருக்குமிடமெல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.புனித ரமழான் வருவதால் நம் தேவைகளின் முக்கியத்துவம் கருதி காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நமது சகோதரிகள் பலர் முயலாம். எல்லாவற்றையும் நன்கறிந்தவன் அல்லாஹ்.

Post a Comment

0 Comments