Subscribe Us

அனுபவம் முதிர்ந்த, ஆளுமை மிக்க கற்பிட்டியின் மைந்தர்களை, தகவல் பெட்டகங்களை ஒன்று சேர்க்கும் பொன் மாலை

-Alliance Of Community Welfare-


கற்பிட்டியில் சிதறிய முத்துக்களாக காணப்படும் பல அனுபவம் முதிர்ந்த, ஆளுமை மிக்க கற்பிட்டியின் மைந்தர்களை, தகவல் பெட்டகங்களை ஒன்று சேர்த்து எமது ஊரிலுள்ள பாடசாலைகள், அவற்றின் சமகால கல்வி தரம், அதன் நிலை, எமது ஊரிலுள்ள சமயம் சமூக நிறுவனங்கள், வர்த்தகம், மக்கள் தொடர்பாடல், அரச அரசியல் நிர்வாகம் போன்ற துறைகளின் சமகால, வளர்ச்சி, கற்பிட்டியின் எதிர்காலம் பற்றிய பல தலைப்புகளில் கருத்தாடும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க, சிதறிய முத்துக்களை மாலையாக கோர்க்கும் நிகழ்வு தான் இந்த பொன் மாலை.
வரலாற்று பாரம்பரியமிக்க எமது பாடசாலை அண்மைக்காலத்தில் சந்தித்துவரும் பின்னடைவு தொடர்பாக ஆராய்ந்து, எமது பாடசாலையை மீண்டும் புதுப்பொலிவுடன் முன்னனிப் பாடசாலையாக திகழச்செய்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், ஏனைய துறைகளின் வளர்ச்சிக்கு ஒரு உறவுப்பாலம் இடல் போன்ற பல விடயங்களை ஆராய்தல், வரலாற்று பாரம்பரியமிக்க எமது ஊரின் வரலற்று சான்றுகள், பல அரிய தகவல்கள், கதைகள், சம்பவங்கள மற்றும் எமது மண்ணில் மலர்ந்தத வாசமில்லா ரோஜாக்கள் பற்றிய தகவல்களை தொகுத்தல். நவநாகரிக உலகில் எமது ஊர் வளர்ச்சியில் எமது இளைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் போன்ற பல சுவாரஸ்யமான விடயங்களை எமது ஊரில் உள்ள மூத்த தலைவர்கள் கல்விமான்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் என பல அனுபவம் வாய்ந்த மூத்தோர்களுடன் ஒன்றிணைந்து கலந்தாலோசிக்கும் ACW அமைப்பினரின் ஒரு சினேகபூர்வமான சந்திப்புத்தான் இந்த பொன் மாலை. இந்த சந்திப்பு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிகிழமை 17-04-2014 அன்று அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments