Subscribe Us

கபீர் ஹாசீம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்


எதிர்காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகிக்க நினைக்கும் நபர்களே 19ம் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தினதும் அரசினதும் தலைவராக கனவு காணும் நபரே இவ்வாறு 19ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும்.


மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது.


குறுகிய சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுடன் எந்த தரப்பினரும் செயற்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments