Subscribe Us

header ads

பள்ளிவாசலை தகர்க்க வந்த சிஹல ராவயவை உடனடியாக கைது செய்க.


ஜெய்லானி கூரகல பள்ளிவாசலை தகர்ப்பதற்காக ஆயுதங்களுடன் நீதிமன்ற உத்தரவை மீறி சென்ற சிஹல ராவய அமைப்பினரை தண்ணீர் பாய்ச்சி பொலிஸார் விரட்டியடித்தது போதாது அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சிய அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

இனங்களுக்கிடையில் வன்முறைகளை தேற்றுவிக்கும் நோக்கில் பல இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் உச்சகட்ட செயற்பாடுகளில் ஒன்றாகவே நேற்று முன்தினம் பலாங்கொடை ஜெய்லானியில் இடம்பெற்ற சம்பவமாகும் என சுட்டிக்காட்டிய மேல் மாகாண சபை உறுப்பினர், கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு சரியானதொரு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இவ்வாறு இயக்கங்கள் சட்டத்தை கையிலெடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

குறித்த பள்ளிவாசல் இருக்குமிடத்தை அவர்கள் கைப்பற்ற முயற்சிப்பதை ஒருபோது முஸ்லிம்களால்  அனுமதிக்க முடியாது. குறித்த இடத்தில் பிரச்சினை இருப்பின் சட்ட ரீதியாக அனுகி அதனை பேச்சுவார்த்தையூடாக தீர்த்துக்கொள்ள முடியும். ஆனாலும் அவ்விடம் வரலாற்று ரீதியாகவே முஸ்லிம்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. எனவே குறித்த அமைப்பினர் அத்துமீறி செயற்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

நல்லாட்சியின் கீழ் நாட்டில் சகல மக்களும் ஒற்றுமையுடன் வழ்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார். மீண்டும் அவரின் ஆதரவாளர்களினால் அமைதியான நிலைமை குழப்பப்படுகின்றது என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments