Subscribe Us

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரருக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வு!! ஒரு கோடி


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரருக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வு வழங்க 1ம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறது.

ஜனாதிபதியின் இளைய சகோதரர் குமாரசிறி சிறிசேன ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன தலைவராக செயற்படுகிறார். ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவரின் மாதந்த சம்பளம் இதுவரை 950,000 ரூபாவாக இருந்த நிலையில் அதனை 30 லட்சம் வரை உயர்த்த ஸ்ரீங்கா டெலிகொம் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

டெலிகொம் நிறுவனமானது தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் கீழ் இயங்குகிறது. அதன் அமைச்சரான மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கு அமைய பணிப்பாளர் சபை இந்த சம்பள உயர்வு தீர்மானத்தை எடுத்துள்ளது என்கிறார்கள். டெலிகொம் நிறுவனத் தலைவராக மாத்திரமன்றி அதன் கீழ் இயங்கும் மொபிடல் நிறுவன பதில் தலைவராகவும் குமாரசிறி சிறிசேன செயற்படுகிறார். அதற்கான சம்பளத்தையும் அவர் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே அடிப்படை சம்பளம் மாத்திரமே கூறப்பட்டுள்ளது. அதுதவிர இரு நிறுவனங்களிலும் கிடைக்கும் மேலதிக கொடுப்பனவுகளுடன் சேர்த்தால் சுமார் ஒரு கோடி ரூபாவை எட்டும் என்று கூறப்படுகிறது. டெலிகொம் சிறுவன பணிப்பாளர் சபையின் இந்த சம்பள உயர்வு முடிவுக்கு நிறுவனத்தின் பங்காளி நிறுவனமான மலேசியாவின் மெக்ஷிஸ் நிறுவனம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

அதற்கு பதில் அளித்துள்ள பணிப்பாளர் சபை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டியதே என்று கூறியுள்ளது. இவ்வாறு கண்மூடித்தனமான தீர்மானம் எடுப்பதாயின் மெக்ஷிஸ் நிறுவனம் தமது பங்குகளை விற்க நேரிடும் என குறித்த நிறுவனம் டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளதுடன் பங்குகளை விற்பது குறித்து மெக்ஷிஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

Post a Comment

0 Comments