Subscribe Us

header ads

6 இலட்சம் ரூபாவுக்கு தளபாடங்கள் வழங்க முதலமைச்சர் உறுதிமொழி (படங்கள் இணைப்பு)

அபு அலா –


அம்பாறை மாவட்ட மாவடிப்பள்ளியில் திவிநெகும திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை பார்வையிடுவதற்கா கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்றிரவு திங்கட்கிழமை (06) விஜயத்தை மேற்கொண்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.ஆரிப் சம்சுதீனின் அழைப்பின் பேரில் நேற்றிரவு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எ.எல்.எம்.நஸீர், அலிசாஹிர் மௌலான உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தின்போது கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் தலைவர் என்.மஹ்ருப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டிடம் நம்பிக்கையாளர் சபையின் சார்பில் அதன் தலைவரினால் மகஜர் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டவை தொடர்பில்,

மாவடிப்பள்ளி பொதுநூலகத்துக்கு சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் இல்லாத குறையினால் இந்த நூலகம் திறந்து வைப்பதற்கு காலதாமதமாக செல்கின்றது. இதனை செய்து தறுமாறு வேண்டப்பட்டதையடுத்து முதலமைச்சர் குறித்த தொகையினை வழங்கி பொதுநூலகத்தையும் திறக்க என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் உறுதியளித்தார்.

இந்த பொதுநூலகம் திவிநெகும திட்டத்தின் மூலம் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments