12 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை குறுகிய காலத்தில் புதிய அரசாங்கம் செய்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் பெருந்தெருக்களை அமைப்பதற்கு 200 கோடி ரூபாவிற்கு அதிகமான பணத்தை செலவிட்டுள்ளது.
எனினும், நாட்டுக்கு மிகவும் முக்கியமான கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு உரிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த அரசாங்கம் பாரியளவில் மக்கள் பணத்தை விரயம் செய்துள்ளது.
அவ்வாறு விரயமாக்கப்பட்ட பணத்தை மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் பயன்படுத்துகின்றது.
அரசாங்கம் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே அரசாங்கம் இவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments