திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நாடெங்கும் இடம்பெற்று வரவே செய்கிறது. ஆனாலும் மஹியங்கனயில் ஒரு திருடன் வித்தியாசமாக திருடிய இடத்திலேயே ஆழ்ந்து உறங்கி விடியற்காலையில் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் பிரபல திருடனான குறித்த நபர் பல சரக்குக் கடையொன்றில் இரவு நேரம் நுழைந்து தனக்குத் தேவையான பொருட்களைத் திருடிவிட்டு அதே இடத்தில் சற்று நேரம் தூங்கி எழுவதற்காக கண் அயர்ந்து விடியற்காலையில் வர்த்தக நிலைய உரிமையாளரிடம் கையும் களவுமாக அகப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments