Subscribe Us

header ads

மத நம்பிக்கையும் ஊடகங்களின் திமிர்த்தனமும்....!!



மகளிர் தினத்தையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சி பெண்களுக்கு தாலி பெருமைப்படுத்துகிறதா ? சிறுமைப்படுத்துகிறதா ? என்ற தலைப்பிற்கான நிகழ்ச்சியின் விளம்பரம் செய்யப்பட்டது.

அந்த விளம்பரத்தில் பெண்களுக்கு தாலி என்பது நாய்க்கு சங்கிலி கட்டுவது போல் உள்ளதாக ஒரு பெண் பேசுவதை விளம்பரம் செய்தார்கள்.

தாம் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக இந்து முன்னணி இயக்கத்தினர் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டார்கள்.

ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்காமல் நேரடி தாக்குதல் தொடுத்ததை கண்டிக்கும் அதேவேளையில்....

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு மதத்தின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக தாலி பெருமைப்படுத்துகிறதா சிறுமைப்படுத்துகிறதா என்ற விவாதம் நடத்துவதே சர்ச்சைக்குரிய விசயமாகும்.

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க மத நம்பிக்கையை சீண்டும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்புவது சரியானது அல்ல...

தொலைக்காட்சி நடத்துவதே நாட்டு நடப்புகளை அப்படியே மக்களுக்கு பிரதிபலிப்பதற்கான ஜனநாயக வழியிலான ஊடகமே தவிர மத விவகராங்களில் மூக்கை நுழைப்பது தொலைக்காட்சியின் வேலையல்ல... 

தம்முடைய தொலைக்காட்சியின் TRP ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக மதம் சார்ந்த உணர்ச்சியை தூண்டும் விதமான நிகழ்ச்சியை நடத்துவதை தொலைக்காட்சி நிறுவனங்கள் முற்றிலும் கை விட வேண்டும்.

அதேசமையம்...

இந்து முன்னணி இயக்கம் ஒன்றும் நியாயத்தை நிலைநாட்டும் உன்னத இயக்கம் அல்ல, 

புதிய தலைமுறையை விட மிகவும் அருவருக்கத்தக்க வகையிலான வகையில் பிறமத நம்பிக்கையை மிகவும் இழிவாக கொச்சைப்படுத்தியவர்களே இந்து முன்னணி இயக்கத்தினர்.

எந்த அளவுக்கு என்றால் காம சகதியில் புரண்டு கிடப்பது கன்னி மேரியா ? கதிஜாவா ? மணியம்மையா ? என்று கிறித்தவத்தையும், இஸ்லாத்தையும், பெரியாரையும் இழிவுப்படுத்திய இழிப்பிறவிகள் தான் இந்து முன்னணி இயக்கத்தினர் என்பதிலும் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. 

அதேசமையம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மத நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

-முகநூல் முஸ்லிம் மீடியா-

Post a Comment

0 Comments