Subscribe Us

புதிய தலைமுறை மீதான தாக்குதல் : இந்துத்துவ தீவிரவாதி சரண் - தேசத்தை அச்சுறுத்தும் காவி தீவிரவாதம்....!!


இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறை மீது நேரடி போர் புரிந்துள்ளது காவி இந்துத்துவ தீவிரவாதம்.

புதிய தலைமுறை அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் புலன் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில்....

இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான இந்து இளைஞர் சேனா இயக்கத்தின் மாநில தலைவர் ஜெயம் பாண்டியன் சரணடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்....

நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எங்களது அமைப்பே பொறுப்பேற்கிறது, எங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் தான் குண்டுவெடிப்பை நடத்தினார்கள், அதனால் தாம் சரணடைவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ச்சியாக நடைபெற்ற 16 குண்டுவெடிப்புகளுக்கும் RSS அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சொல்லியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக சாமியாரும், தீவிரவாதியுமான அசிமானந்தா வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

அமைதி பூங்காவான இந்திய தேசத்தை காவி தீவிரவாதம் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments