இங்கிலாந்திற்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அந்த அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவை லண்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா அமைப்பின் நிலைமைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.




0 Comments