Subscribe Us

header ads

இனியாவது மு.கா கட்சியினால் போராளிகள் கவனிக்கப்படுவர்களா..??


மு.கா கட்சிக்கு தேசிய நீர்வழங்கல் சபை,மின்சார சபை,போக்குவரத்து சபை போன்ற சபைகளில்  வேலை வாய்ப்புக்களினை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு தங்களுக்கு வழங்க முடியுமான தொழில் வாய்ப்புக்களினை இலங்கை பூராகவும் பகிர்ந்தளிக்க கட்சி தீர்மானித்து தங்களது முக்கிய உறுப்பினர்களிடம் பெயர் விபரங்களை கேட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

பொதுவாக பதவிகள் திறமையுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.இவ்வாறான அடிப்படையில் மு.கா பதவிகளினை வழங்கினால் அதில் விமர்சனம் செய்வதற்கு இல்லை.எனினும்,அவ்வாறு பதவிகள் வழங்கப்படுவதற்கான தூய்மையான அரசியல் நிலை தற்போது இல்லை.

மு.கா இவ் பதவிகளினைப் பெற மு.கா ஆதரவாளர்கள் தான் காரணம் என்பதனை யாரினாலும் மறுக்க முடியாது.இவ்வாறு இத் தொழில் வாய்ப்புக்களினை பெற காரணமான மு.கா போராளிகளிடையே இத் தொழில் வாய்ப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுமா? என்ற வினா எழுப்பினால் அது சந்தேகம் என்ற பதிலையும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா என்ற வினாவினை எழுப்பினால் இல்லை என்ற பதிலையும் தான் பெற முடிகிறது.
.
ஏனெனில்,குறித்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்களில் சிலவை குறித்த உறுப்பினர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.எஞ்சியவை பணத்திற்கு விலை போகும்.இவ்வாறு உறுப்பினர்களின்  சுயநலத்திற்கு  ஏன் பொது மக்கள் மாரடிக்க வேண்டும்?

இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் பகிரப்பட்டால் கட்சியின் வளர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்த போராளிகள் என்ன செய்வது? மு.கா இற்கு உழைத்துவிட்டு இன்னுமொரு கட்சியிடம் வேலை கேட்டு செல்ல முடியுமா? இல்லை சென்றால் தான் கொடுப்பார்களா?


"பணத்தினை வாங்கிக் கொண்டு தொழிலை வழங்குறான்" என்ற செய்தி மக்களிடையே வெளிப்படாமல் இருக்க அண்மையில் மு.கா உறுப்பினர்கள் சிலர் தங்களால் வழங்க முடியுமான தொழில்களை தனது ஊரிற்கு வழங்காமல் வேறு ஊரிற்கு வழங்கல்,தான் தேர்தல் கேட்கும் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களை தவிர்த்து வேற்று மதத்தவர்களுக்கு வழங்கல் போன்ற செயற்பாடுகளினை முன்னெடுத்து இருந்தனர்.இச் செயற்பாடு மு.கா ஆதாரவாளர்களிடையே மனக் கசப்பினையும்,வெறுப்பினையும் ஏற்படுத்தி இருந்தது.இதனை விடக் கேவலமானதும்  துரோகத்தனமானதுமான  செயற்பாடு என்ன தான் உள்ளது?

எது எவ்வாறு இருப்பினும் காசு கொடுத்தாவது தொழில் கிடைக்க மாட்டாதா? என காத்திருக்கும் எம்மவர்களிடையே பணத்தினை வாங்கிக் கொண்டாவது தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுதலுக்காவது மு.கா கட்சி நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.


எனவே,மு.கா கட்சி  இவ் விடயத்தில் அதீத கரிசனை கொள்ள வேண்டும்.இவ்வாறான செயற்பாடுகள் மேலும் மேலும் அரங்கேறினால் மு.கா கட்சியின் நிலை அவ்வளவுதான் என்பதனையும் அறிந்து செயல்பட வேண்டும்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Post a Comment

0 Comments