100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் உலக சாதனை நிகழ்த்தியிருப்பவர் உசேன் போல்ட். இவர் 4-ஆவது முறையாக சுவிட்சர்லாந்தின் லாசன்னேவில் நடக்கும் ’அத்லெட்டிஸ்மா டைமண்ட் லீக்’ 200 மீட்டர் போட்டியில் பங்கேற்பதை தற்போது உறுதி செய்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு இதே போட்டியின் போதுதான் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலகின் அதிவிரைவான ஓட்டமாக 19.58 நொடிகள் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
ஜூலை 9-ஆம் திகதி நடைபெறும் இந்த வருடத்திற்கான போட்டியில் அவர் பங்கேற்பதை உறுதி செய்துள்ள நிலையில், இந்தப் போட்டியில் அவரது உலக சாதனையை அவரே முறியடிப்பார் என்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 6 முறை ஒலிம்பிக் சம்பியன் பட்டம் பெற்ற வீரர் உசேன் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments