Subscribe Us

header ads

UPDATE....கற்பிட்டியில் நடந்த வீதி விபத்தில் தாயும் குழந்தையும் வபாத் ஒருவர் காயம்.


கல்பிட்டி நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தாயொருவரும் அவரது 04 வயது மகனும் உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  

கல்பிட்டியைச் சேர்ந்த நசீமா (வயது 21) முஹம்மது பர்ஹான் (வயது 04) ஆகிய இருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

 முச்சக்கரவண்டியொன்றும் சிறிய ரக லொறியொன்றும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

 நல்லாந்தழுவை பிரதேசத்திலுள்ள தமது உறவினர்களின் வீட்டுக்கு நேற்றுப் பகல் சென்று இரவு முச்சக்கரவண்டியில் திரும்புகையிலேயே தாயும் மகனும் இவ்விபத்தில் சிக்கியுள்ளனர். 

விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் படுகாயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் நேற்று புதன்கிழமை (11) உயிரிழந்தார். 

விபத்துடன் தொடர்புடைய சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - 









-KET-

Post a Comment

0 Comments