தனது அரசியல் வாழ்வில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை சுயசரிதையாக வெளியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவல்களைத் திரட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் அரசியலில் ஈடுபடும் ஆர்வத்தை இதன்மூலம் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியில், தனது பாதுகாப்பை பலப்படுத்த தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட வேண்டும் என மஹிந்த தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments