எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற கடமையை நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் அர்ப்பணிப்புக்களை மறந்து விட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் பிபிசி செய்தி சேவைக்கு அளித்த நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
19ம் திருத்தச் சட்டத்தை அவசர சட்டமாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதில் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டம் அவசரமாக கொண்டு வரப்பட்ட போது எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு அவசரமாக இதனை கொண்டு வருகின்றீர்கள் என்று கேட்டார்கள்.
எனவே 19ம் திருத்தச் சட்டமும் அவசர அவசரமாக முன்வைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. நூறு நாள் திட்டத்திற்குள் அதனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் முறையில் மாற்றம் வேறு, திருத்த சட்டம் வேறு. இவை இரண்டும் வெவ்வேறு என்றும் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி தலைவர்களுடன் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறித்த கூட்டத்தில் இடம்பெறுகின்ற கலந்துரையாடல்களில் எட்டப்படுகின்ற தீர்மானங்களுக்கமைய எதிர்வரும் காலங்களில் செயற்படவுள்ளோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதீத அதிகாரங்கள் நீக்கப்படும் என்ற வாக்குறுதியே அளிக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


0 Comments