Subscribe Us

header ads

விளை­யாட்டுத் துப்­பாக்­கியை காட்டி பெண்ணிடம் ரூ.12 இலட்சம் கொள்ளை


கடு­கண்­ணாவ பொலிஸ் பிரிவில் பிலி­ம­த்த­லாவ மக்கள் வங்­கியில் பணம் வைப்­பி­லிடச் சென்ற தனியார் நிறு­வன கணக்­கா­ள­ராகப் பணி­யாற்றும் பெண்­ணொ­ரு­வ­ரிடம் விளை­யாட்டுத் துப்­பாக்­கி­யையும் கத்­தி­யையும் காட்டி அச்­சு­றுத்தி சுமார் 12 இலட்சம் ரூபா பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.
இச்­சம்­பவம் நேற்று பகல் வேளையில் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் 11 இலட்­சத்து 68 ஆயி­ரத்து 900 ரூபா பணம் இவ்­வாறு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் பிளஸ்டிக் விளை­யாட்டு துப்­பாக்கி ஒன்­றினை அப்­பி­ர­தே­சத்தில் விழுந்து கிடந்த நிலையில் கடு­கண்­ணாவ பொலிஸார் மீட்­டுள்­ள­த­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.
நேற்று பகல் வேளையில் பிலி­ம­த­லாவ மக்கள் வங்­கியில் வைப்­பி­லி­ட­வென ஹேனா­வல பிர­தேச தனியர் நிறு­வனம் ஒன்றின் கணக்­கா­ள­ராக கட­மை­யாற்றும் பெண்­ணொ­ருவர் 11 இலட்­சத்து 68 ஆயி­ரத்து 900 ரூபா­வுடன் அங்கு சென்­றுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்ரில் வந்த இருவர் கைத்­துப்­பாக்கி ஒன்­றி­னையும் கத்தி ஒன்­றி­னையும் காட்டி அப் பெண்ணை அச்­சு­றுத்தி அப்­ப­ணத்­தொ­கை­யினை கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
பிலி­ம­த­லாவ மக்கள் வங்கி அருகே இடம்­பெற்­றுள்ள இச்­சம்­பவம் குரித்து உடன் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட5தாக கூரப்­படும் பிளஸ்டிக் விளை­யாட்டு கைதுப்பாக்கி ஒன்றினை அப்பிரதேசத்தில் இருந்து மீட்டுள்ளனர். இந் நிலையில் கடுகண்ணாவ பொலிஸார் கொள்ளையர்களைத் தேடி மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.

Post a Comment

0 Comments