புத்தளம் நகரின் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்ய உள்ளூர்
மற்றும் வெளியூர் வியாபாரிகள் முற்பட்டபோது நகர சபை கட்டளை சட்டத்தின் கீழ்
நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை, இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.
2௦13
ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் நடைபாதைகள் மீட்கப்பட்டு பாதாசாரிகளின்
அசௌகரியங்கள் நிவர்த்திசெய்யப்பட்டதுபோல் புத்தளத்திலும் நடைபாதைகள்
மீட்டெடுக்கப்பட்டன.
இருப்பினும் நடைபாதை வியாபாரிகளுக்கு புறம்பான
வேறொரு இடம் வழங்கப்பட்டிருக்கும்போது அதில் ஒரு சிலர் வியாபாரம்
செய்துவருகின்ற போதும் இன்னும் சிலர் நகரின் பிரதான பாதையோரங்களே தமது வியாபாரத்துக்கு தேவை என்று வாதிட்டு வருகின்றனர்.
நகர சபையின் புதிய கடைத் தொகுதிகளை ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் Delta
Market அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேட்கொள்ளப்பட்டு வருகிறது. இது நடைபாதை
வியாபாரிகளுக்காகவே ஒதுக்கப்படவுள்ளது.
எது எப்படி இருப்பினும் ஒரு
சில அரசியல்வாதிகளின் ஏஜண்டுகளாக செயற்பட்டு நகரின் நடைபாதைகளை ஆக்கிரமிக்க
முட்படுவதை நகரசபை வன்மையாக கண்டிக்கிறது.
இதுபற்றி, புத்தளம் நகரை
ஆக்கிரமித்து தமது கைங்கரியங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு
செயற்பட்டுவரும் ஒரு குழுவின் நாசகார வேலையே இது என நகரபிதா தெரிவித்தார்.
மேலும், இதுசம்பந்தமாக தனக்கிருக்கின்ற அதிகாரங்களை பாவித்து கடுமையான
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்ததுடன் வீதி அபிவிருத்தி
அதிகார சபை மற்றும் பொலிசாரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நடைபாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து நகர
சபை உறுப்பினர் எஸ்.ஏ. சதுர்தீன் பாதையில் அமர்ந்து தனது எதிர்ப்பை
வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.-PUC-



























0 Comments