பலாங்கொடை - ஹூங்கம மகா வித்தியாலத்தில் 3ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இன்று காலை பாடசாலை ஒன்றுகூடல் இடம்பெற்ற வேளையே அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த 6ம் திகதி அம்பலாந்தோட்டை பகுதியில் பதிவாகியது.
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட 15 வயது மாணவன் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments