Subscribe Us

பிரிட்டிஸ் வெளியுறவுத்துறை அமைச்சரைத் சந்தித்தார் மங்கள


பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாம் இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் சிறந்த சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதாக ஸ்வைர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த மாதம் இலங்கை வந்திருந்த ஸ்வைர், ஜனாதிபதி பிரதமர், வடக்கு ஆளுநர் உட்பட்ட வகையில் அனைத்து தரப்பினரையும் சந்தித்தார்.

இதன்பின்னர் நாடு திரும்பும்போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்வைர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை தற்போது லண்டன் சென்றுள்ள இலங்கையி;ன் வெளியுறவு அமைச்சர் அங்கிருந்து அமரிக்காவுக்கு சென்று ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்திக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments