Subscribe Us

புனித மக்கமா நகரில் இளம் பெண்ணை சீரழித்த சவுதி இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர்.


குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையில் பாரபட்சம் இல்லை சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த இருவர் புனித மக்கமா நகரில் வைத்து ஓர் கன்னிப் பருவ யுவதியை கார் ஒன்றில் கடத்திச் சென்று ஒருவர் அவளை அடிததுத் துன்புறுத்தி கடுமையாகக் கற்பழித்துள்ளதுடன், இரண்டாம் குற்றவாளி கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டுவிட்டு அவளது கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு அவளை கைவிட்டுள்ளனர். அவ்விருவரும் மதுபோதையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை அறிந்த பொலிசார் குற்றவாளிகளைக் கைது செய்தனர். வழக்குத் தொடர்ந்ததில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து எச்சரிக்கைச் சட்டத்தின் அடிப்படையில் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தும் பாரபட்சமின்றி இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்ற புதன் கிழமை கொலை செய்யப்பட்டனர்.

சவுதி  அரேபியாவில் குற்றம் முழுமையாக சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டால் தண்டனையில் பாரபட்சத்துக்கு இடமில்லை.

தகவல்:  ரியாதிலிருந்து அபூ ஸஃத்
ஸவ்துல் ஜௌவ்ப் – மக்கா முகர்ரமா

Post a Comment

0 Comments