Subscribe Us

கண் சிமிட்டி கொலையாளியை காட்டிக் கொடுப்பாரா கோமா நிலையில் உள்ள பெண்: அதிரும் தகவல் !


உள்ள ஸ்டெல்லின் -பொஷ் என்னும் நகரில் , ஒரு குடும்பம் வசித்து வந்தது. இரண்டு அண்ணாவுக்கு ஒரு பெண் சகோதரியாக இருந்தார் மார்லிவ். இவர்கள் பெற்றோருடம் வசித்து வந்தார்கள். கடந்த ஜனவரி 27 அன்று இரவு வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர், கோடரியால் அம்மாவையும் அப்பாவையும் வெட்டிக் கொன்றுவிட்டார். இன் நிலையில் தடுக்கச் சென்ற மூத்த அண்ணாவையும் அவர் வெட்டிக் கொன்றுவிட்டு, இளைய சகோதரனையும் தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த மார்லிவ் அதனை தடுக்க முயன்றுள்ளார். கொலைகாரன் மார்லிவ்வை, தலையில் பலமாக தாக்கி பின்னர் கழுத்தை வெட்டி விட்டான். இந்த சமயத்தில் அங்கிருந்து காயங்களோடு தப்பித்த இளைய சகோதரர் பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றுயிராக இருந்த மார்லிவ்வை , வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். மார்லிவ் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் என்ன ஆச்சரியம் அவர் இறக்கவில்லை. 16 வயதாகும் அவர், தற்போது உடல் நிலை தேறிவருகிறார். ஆனால் அவரால் பேசமுடியாது. கைகளை அசைக்க முடியாது என்று பல குறைபாடுகள் இருக்கிறது. இருப்பினும் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். 5 ந்தும் 5 ந்தும் பத்து தானே என்று கேட்டால் அவர் உடனே கண்களை அசைக்கிறார். சரியான விடைக்கு மட்டும் அவர் கண் சிமிட்டி சமிஞ்சையை கொடுக்கிறார். இதனால் பொலிசார் சற்று உட்சாகம் அடைந்துள்ளனர். ஏன் என்றால் , கொலையாளியை நேரில் பார்த்த சாட்சி இவர் மட்டுமே. இளைய சகோதரார் தப்பி இருந்தால் கூட, அவர் கொலையாளியை சரியாகப் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே சந்தேக நபர்களின் புகைப்படங்களை காட்டில் பொலிசார் கேட்டால் , கண் சிமிட்டியே கொலையாளியை காட்டிக்கொடுத்துவிடுவார் இப் பெண்… திக் திக் நிமிடங்கள் தான்….

Post a Comment

0 Comments