புதிய மின்சார இணைப்பை ஒரே நாளில் வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பை பெற்றுக்கொள்வதில் பாவனையார்களுக்கு ஏற்படும் தாமதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஒரேநாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி ஆணமடுவ பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ், மின் இணைப்பை கோரும் அதே தினத்தில் கோரிக்கையை ஆராய்ந்து, மதிப்பீடு தயாரித்து, அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டதும் மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் புதிய மின்சார யோசனைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments