Subscribe Us

நினைக்கும் அளவிற்கு பேய் கறுப்பு கிடையாது: ஜோன் அமரதுங்க


நினைக்கும் அளவிற்கு பேய் கறுப்பு நிறமில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ன நடக்கின்றது என? இவ்வாறான பல்வேறு சவால்களை ஏற்கனவே எனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்திருக்கின்றேன்.

விமர்சனங்களையும் கருத்துக்களையும் வெளியிட எதிர்க்கட்சியினருக்கு அவகாசம் உண்டு. அதில் எவ்வித தலையீடுகளையும் செய்யப் போவதில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடப் போவதில்லை என ஜோன் அமரதுங்க குறித்த சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments