மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ளது அமுரி ஆசிரம பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கூடம் மாநில அரசால் அங்குள்ள தாழ்ந்தப்பட்டவர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிக்கூடத்தில் 570 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 150 மாணவிகள் ஹாஸ்டலில் தங்கி உள்ளனர்.
இதில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கடந்த பிப்ரவரி 4-ந்தேதி ஹாஸ்டலில் வைத்து ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. உடனடியாக மாணவியையும் குழந்தையையும் அவரது வீட்டில் சேர்த்து உள்ளனர். 12 வயதாகும் மாணவியின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி ஆவார்.
நேற்று உமுரி ஆசிரமத்தின் தலைமை ஆசிரியர் கைலாஷ் சரண் பர்மா, ஹாஸ்டல் சூப்பிரெண்டு சபிதா குரு ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது போல் கந்தாமால் மாவட்டத்தில் உள்ள இதே அமுரி ஆசிரம பள்ளி கூடத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் ஹாஸ்டலில் ஆண் குழந்தை பிறந்தது.இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவனை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்து உள்ளனர்.அவனது பெயர் சுகந்தா பரதன் என்கிற துனா (வயது 24). 10-ம் வகுப்பு மாணவி கடந்த வருடம் மே மாதம் அவரது உறவினர் வீட்டுக்கு செல்லும் போது துனாவால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சஷ்மிதா பரிதா, நமிதா பர்தான் ஆகிய இரண்டு ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர்.தலைமை ஆசிரியை ஆஷா லதா பதி சஸ்பெண்ட் செய்யபட்டார். மாணவர்கள் உடல நலத்தை கண்காணிக்கும் துணை செவிலியரும் சஸ்பெண்ட் செய்யபட்டார்.
மாணவிகள் குழந்தை பெறும் சமயங்களில் அவர்களுக்கு குறைந்த பட்ச சுகாதார வசதி கூட செய்து கொடுக்கவில்லை என அங்குள்ள அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் யாமினி சரங்கிக்கு புகாராக வரும் போதுதான் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.இதை தொடர்ந்து கலெக்டர் சாரங்கி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.


0 Comments