Subscribe Us

யூரியா கலந்த தேனீரால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!


நீர்கொழும்பு தொன் பொஸ்கோ கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வரும் 27 மாணவர்கள் நேற்று மாலை தேனீர் அருந்திய நிலையில் மயக்கமுற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமான விசாரணையில் இவர்களுக்கு வழங்கப்பட்ட தேனீரில் சீனிக்கு பதிலாக யூரியா பசளை கலக்கப்பட்டு அதை அருந்திய மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது சம்பந்தமான விசாரணை தொடர்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments