Subscribe Us

கட்டுப்பாட்டு விலை அமுலில் இல்லையா? 1977க்கு முறையிடுங்கள்: அமைச்சர் ரிஷாட்


கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்ய மறுக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்குமாறு கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளை வழங்க மறுக்கும் வியாபாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர், நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத நிறுவனங்கள் குறித்து 1977 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments