Subscribe Us

ZAHIRIANS' TWELVE இன் புத்தக புரட்சி



அன்பின் புத்தளம்வாழ் மக்களே, சகோதர சகோதரிகளே !


புத்தளம் பிரதேசத்தின் பல சமூக வேலைகள், விழிப்புணர்வுகளை வெற்றிகரமாக நடாத்தி வரும் ZAHIRIANS' TWELVE அமைப்பானது இம்மாதம் கல்வி நடவடிக்கையில் 'புத்தக புரட்சி' ஒன்றை செய்ய உள்ளது.

அதாவது இன்று அரசாங்கத்தால் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த மேலதிக பாடப்பயிற்சி புத்தகங்கள் (Extra Exercise Books), கடந்த கால வினாத்தாள் புத்தகங்கள் (Pass Paper Books) என்பன இன்றியமையாதன. மேலும் இவ்வாறான பயிற்சி புத்தகங்கள் பொருளாதரத்தில் வறிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கின்றது.

இது ஒருபுறம் இருக்க கடந்த வருடம் இவ்வாறு உபாயோகிக்கப்பட்ட பாடப்பயிற்சி புத்தகங்கள் புதிய ஆண்டுக்கு உயர்த்தப்பட்டதும் பாவனையற்று வீடுகளில் கரையான்களுக்கும்,பூச்சிகளுக்கும் பலியாகுவது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறு கடந்த வருடம் உபாயோகிக்கப்பட்ட பாடப்பயிற்சி புத்தகங்கள், கடந்தகால வினாத்தாள் புத்தகங்கள் என்பவற்றை ஒன்று திரட்டி இவ்வருடம் கல்வி கற்க ஆர்வமுள்ள, வறிய மாணவர்களுக்கு வழங்கும் புதியதொரு 'புத்தக புரட்சியை' திட்டமிட்டுள்ளது.

எனவே உங்கள் வீடுகளில் உபயோகம் அற்று காணப்படும் பழைய பாட புத்தகங்கள், கடந்த கால வினாத்தாள் புத்தகங்கள் என்பவற்றை ZAHIRIANS' TWELVEக்கு வழங்கி உதவுமாறு தயவாய் எதிர்பார்க்கின்றோம்.

நன்றிகள்.

வழங்க வேண்டிய இடம் : 88/22, மரிக்கார் வீதி, புத்தளம்

காலம் : 16.01.2015 தொடக்கம் 24.01.2015 வரை

மேலதிக தொடர்புகளுக்கு -
Abdul Fathir - 071 862 6519
Aasif Ali - 071 994 5565
Nafly Hussain - 071 54 44 074

- THE PUTTALAM TIMES-

Post a Comment

0 Comments