அகலவத்தை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பால் பதட்ட நிலை தோன்றியதை அடுத்து அங்கு விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தொடர்பில் ஏற்கனவே செய்தி ஒன்றும் பிரசுரித்து இருந்தோம். அங்கு ஏற்பட்ட பதட்ட நிலைக்கான காரணம் தற்போது தெரிய வருகிறது.
தேர்தல் முடிவை தொடர்ந்து ஐ.தே.க வினர் தங்கள் கட்சிக் கொடியை பறக்க விட்டுள்ளனர். இந்த கொடியை வெட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அங்கு நீலக் கொடியை பறக்க விட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெரும ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரதேசபை உறுப்பினர்கள் இருவருக்கு அடித்துள்ளார் அதனை தொடர்ந்தே அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளது.
“எதிர்கட்சி ஆட்சியிலே தேவரப் பெரும களத்துல இறங்கிடுவார் இப்போ சொல்லவே தேவையில்லை ” என்ற தொனியில் பலர் இது தொடர்பில் சமூக வலைகளில் கருத்து தெரிவித்துள்ளனர்.-LANKA DEEPA-

0 Comments