Subscribe Us

தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக சுகாதார அமைச்சரின் கடுமையான நடவடிக்கை


அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களை கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் வேலையில் ஈடுபடுத்தும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன 'ரிவிர' செய்தி ஊடகத்திற்குத் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் 'சுற்றி வளைப்புக்கள்' நடத்தப்படும் எனக் கூறிய அமைச்சர், 'குறித்த வைத்தியர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றும் கூறினார்.



இச் சட்டம் விசேட வைத்திய நிபுணர்கள், பரிபாலனத்துறை வைத்தியர்கள், வைத்திய அதிகாரிகளுக்கும் பொருந்தும்.

தனியார் வைத்தியசாலைகளினால் இதற்கான பின்னணியை அமைத்துக்கொடுப்பதினால் இப் பிரச்சினை தலைதூக்கியிருப்பதாகவும் இது பாரதூரமான குற்றம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்: රිවිර (சிங்களம்)

நன்றி : -The Puttalam Times-

Post a Comment

0 Comments