3-நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு இன்று காலை 9.45 மணிக்கு வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் ஒபாமா மற்றும் அவரது மனைவி இருவரும் ஐ.டி.சி. மயூரியா 5 நட்சத்திர ஹோட்டலுக்கு பீஸ்ட் காரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இனி இன்று ஒபாமாவுக்கு இந்தியாவில் என்னன்ன புரோகிராம் என்பதை பார்போம்.
மதியம் 12 மணி
|
ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு
|
பகல் 12.40 மணி
|
ராஜ்காட்டில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், மரக்கன்று நடுதல்
|
1 மணிக்கு பிறகு
|
ஐதராபாத் இல்லத்தில் வைத்து ஒபாமாவுக்கு பிரதமர் மோடி மதிய விருந்து
|
பிற்பகல் 2.45 மணி
|
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை
|
மாலை 4.10மணி
|
பிரதமர் மோடி, ஒபாமா இருவரும் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள்.
|
இரவு 7.30 மணி
|
அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்துஅதிபர் ஒபாமா பேச்சு
|
இரவு 7.50 மணி
|
ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து
|
0 Comments