Subscribe Us

மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை கொழும்புக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

மாகாணசபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக சகல மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை நாளை சந்திக்க உள்ளார்.

சில மாகாணங்களின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறனதொரு பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments